தாக்கா : வங்கதேசத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவாமி லீக்கின் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஷாஹின் சக்லதார் என்பவருக்குச் சொந்தமான ஓட்டலுக்கு தீ வைக்கப்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களில் 24 பேர் தீயில் சிக்கி உயிரோடு எரிந்து பலியாகினர்.