×

வரும் 9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: வரும் 9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 9.8.2024 – வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

The post வரும் 9ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Adimuka District Secretaries ,Edappadi ,Palanisami ,Chennai ,Edappadi Palanisami ,All India Anna Dravitha Development Association ,General Secretary ,Assembly Opposition Leader ,Edapadi K. ,Meeting ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரன் விரும்பினால்...