×

மகளிர் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி அயர்லாந்தில் சுற்றுப்பயண மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. லாரா டெலானி இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். 2 டி20 போட்டிகளுக்கான தொடர் வரும் 11 மற்றும் 13ம் தேதிகளில் டப்ளினில் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் தொடர் 16,18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பெல்ஃபாஸ்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும். அயர்லாந்து அணி புள்ளிகள் பட்டியலில் கீழ் நிலையில் இருந்து தங்களை உயர்த்திக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. அவர்கள் தற்போது 12 ஆட்டங்களில் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளனர், அதேசமயம் இலங்கை 21 ஆட்டங்களில் 20 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அயர்லாந்து அணி வீராங்கனைகள் கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, ஜேன் மாகுவேர் மற்றும் காரா முர்ரே ஆகியோர் டி20 போட்டிகளில் மட்டுமே இடம்பெறுவார்கள். ஜோனா லௌரன், ஐமி மாகுவேர் மற்றும் ஆலிஸ் டெக்டர் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள். மீதமுள்ள வீரர்கள் இரு அணிகளிலும் உள்ளனர்.

டி20 தொடருக்கான அணி:

லாரா டெலானி (c), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, அலனா டால்செல், ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, கேபி லூயிஸ், ஜேன் மாகுவேர், காரா முர்ரே, லியா பால், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், உனா ரேமண்ட்-ஹோய், ஃப்ரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோக்கல்

ஒருநாள் தொடருக்கான அணி:

லாரா டெலானி (c), அவா கேனிங், அலனா டால்செல், ஆமி ஹண்டர், அர்லீன் கெல்லி, கேபி லூயிஸ், ஜோனா லௌரன், ஐமி மாகுவேர், லியா பால், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், உனா ரேமண்ட்-ஹோய், ஃப்ரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோக்கல், ஆலிஸ் டெக்டர்

 

The post மகளிர் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ireland squad ,T20I ,ODI ,Sri Lanka ,Ireland Women's squad ,Sri Lanka Women ,Ireland ,T20 ,Laura Delaney ,Women's Cricket ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்….