×

பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறினார். தகுதிச் சுற்றில் 84 மீட்டர் தூர இலக்கு உள்ள நிலையில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா அசத்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வமாக கலந்து கொண்டு அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியாவின் கிஷோர் ஜெனா (குரூப் ஏ), நீரஜ் சோப்ரா (குரூப் பி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தகுதி சுற்றின் (குரூப் ஏ) பிரிவில் கலந்து கொண்ட கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் மட்டுமே வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார். இதையடுத்து தகுதி சுற்றின் (குரூப் பி) பிரிவில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

The post பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,Paris Olympics Javelin ,France ,Javelin ,Paris Olympic javelin ,Dinakaran ,
× RELATED டைமண்ட் லீக் தடகள சாம்பியன் ஷிப்...