கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 3 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை இணையவழியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தனர்.

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளனர். BTech -உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. www.//adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பல்கலை. இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தகவல் தெரிவித்துள்ளது.

 

 

The post கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: