*நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: பொதுமக்கள் எச்சரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள வெண்ணிலா நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெண்ணிலா நகர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், வெண்ணிலா நகரில் தினமும் குடிநீர் கருப்பு நிறத்தில் வந்தால் மக்கள் என்ன செய்வார்கள்? வெண்ணிலா நகரை தவிர்த்து அனைத்து இடங்களிலும் குடிநீர் நன்றாக வருகிறது. குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும், மேலும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவேசமாக பேசும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
The post வெண்ணிலா நகரில் கருப்பு நிறத்தில் குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.