டெல்லி: பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் காப்பீடு தொகையை தரவில்லை என திமுக எம்.பி. கனிமொழி புகார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1.42 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் காப்பீட்டு தொகையை தரவில்லை என திமுக எம்.பி. கனிமொழி புகார் தெரிவித்துள்ளார்.
இது தொரப்பாக மக்கலவையில் உரையாற்றிய அவர்; 2023 டிசம்பரில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன. எனினும் பயிர்க் காப்பீடு செய்த தூத்துக்குடி விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் இதுவரை இழப்பீட்டு தொகை வரவில்லை. பயிர்க் காப்பீடு செய்தவர்கள் இழப்பீடு பெறும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் வறட்சியோ, வெள்ளமோ ஏற்பட்டால்தான் இழப்பீடு தரப்படும் என்ற விதியை தளர்த்தவும் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
The post வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை: கனிமொழி எம்.பி. புகார் appeared first on Dinakaran.