×

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

*டிரைவர் படுகாயம்

நல்லம்பள்ளி : தொப்பூர் அருகே, பவுடர் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் படுகாயம் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பவுடர் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று மாலை நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது.

அதனை அடுத்து தொப்பூர் கணவாய் முதல் வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தை அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி பணியாளர்கள், விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு விபத்துக்குள்ளான லாரியை மீக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

The post தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Toppur ,Nallampally ,Dharmapuri-Salem National Highway ,Salem ,Dinakaran ,
× RELATED தொப்பூர் கணவாயில் கார்கள் மீது லாரி மோதியது; சேலம் பெண் பலி