×

சமூக ரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

சென்னை : மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில திட்டக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ். நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகள் கூடியுள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகியவை ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். சமூக ரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். கவனம் பெறாத துறைகளுக்கான புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சமூக ரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Principal ,M.K.Stal ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,state planning ,DMK government ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து