சென்னை: வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதை நாடாளுமன்றத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசு வக்பு சட்டம் 1995ல் திருத்தங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் தெரியவந்துள்ளது. வக்பு வாரியச் சட்டத்தில் 40 வகையான திருத்தங்களை மோடி அரசு மேற்கொள்வதாக செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் எந்த வகையானவை என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருத்தங்களை முன்மொழியும் மசோதா தாக்கல் செய்யப்படும் போது தடுத்த நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
The post வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதை எதிர்க்கவேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.