×

சென்னையில் தனியார் பள்ளிக்கு 9-வது முறை வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னையில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு ஒன்பதாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் போலியாக இமெயில் அனுப்பி வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் எடுத்த நபர் யார் என்று கண்டுபிடிக்க கோரி போலீசில் பள்ளி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. தொடர் மிரட்டல் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, மவுண்ட் ராணுவ பள்ளிக்கும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

The post சென்னையில் தனியார் பள்ளிக்கு 9-வது முறை வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : 9TH BOMB THREAT ,CHENNAI ,Chettinadu Vidyasram School ,TGB ,Sankar Jival ,9th Bomb Threat to Private School ,Dinakaran ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!