- திருப்பூர்
- மனிதநேய விழா
- இனி ஏக் விதி
- சேயூம்
- அமைப்பு
- ஒருங்கிணைக்கப்பட்ட
- சிறப்பு குழந்தைகளுக்கான சமூகம்
- ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்
- சிறப்பு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விழா
- தின மலர்
திருப்பூர், ஆக. 6: இனி ஒரு விதி செய்வோம் அமைப்பின் மனித நேய விழா மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சமுதாயத்திற்கான விழா திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றுது. இதில் சிறப்பு குழந்தைகள் மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் பார்வை குறைபாடுள்ள சாதனையாளர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு பல்வேறு துறையில் விருதுகளும் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கார்த்திகேய சிவ சேனாபதி, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை நிறுவனர் கவிதா ஜனார்த்தனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post சிறப்பு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விழா appeared first on Dinakaran.