×

ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

 

திருப்பூர், ஆக.6: திருப்பூர் தெற்கு வட்டம் அலகுமலை அழகாபுரி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 16.84 ஏக்கர் மற்றும் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இருவேறு இடங்களில் மொத்தமாக 4.71 ஏக்கர் என மொத்தம் 21.59 ஏக்கர் நிலத்தை, திருப்பூர் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் துணை ஆணையர் ஹர்ஷினி தலைமையில், திருப்பூர் தனி வட்டாட்சியர்
(ஆலய நிலங்கள்) ரவீந்திரன், கோயில் செயல் அலுவலர் சரவணபவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையகப்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட மொத்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur South Circle ,Alakamalai Alagapuri Amman ,Temple ,Muthukumara Palathandayuthapani Temple ,Tirupur Co ,
× RELATED திருப்பூர் பஸ் நிலையத்தில் சுகாதார பணிகள் தீவிரம்