×

கூடலூர் காந்திநகர் சாலையில் ஆபத்தான பகுதியில் எச்சரிக்கை தடுப்பு

 

கூடலூர், ஆக.6: கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், ஆத்தூர், சான்ட் ஹில்ஸ், குயின்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் காந்திநகர் அருகே உள்ள தண்ணீர் கால்வாய் பகுதி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு ஆபத்தான பகுதியாக இருந்தது.

இப்பதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து கடந்த இரு நாட்களுக்கு முன் தினகரனில் செய்தி வெளியானது. இந்நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த சாலையில் காந்திநகர் பிரிவு பகுதியில் இருந்து காந்தி நகர் வரை செல்லும் பகுதியில் பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதில், மழை நீர் நிறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேதம் அடைந்துள்ள பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post கூடலூர் காந்திநகர் சாலையில் ஆபத்தான பகுதியில் எச்சரிக்கை தடுப்பு appeared first on Dinakaran.

Tags : Gudalur Gandhinagar road ,Kudalur ,Gandhinagar ,Attur ,Sand Hills ,Quint ,Oveli ,Dinakaran ,
× RELATED 2வது திருமணம் செய்து உதாசீனம்: கணவர் வீடு முன் குழந்தைகளுடன் மனைவி தர்ணா