×

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஆக. 6: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்ட்டம் நடந்தது. பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு பென்சன் பெற்று வரும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு, ஜனவரி 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி 4 சதவீதத்தை அங்கன்வாடி ஓய்வூதியருக்கும் அறிவித்து, வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் பணப்பலன் கிடைக்குமாறு சங்கத்தின் மாநில செயற்குழு நிறை வேற்றியுள்ள தீர்மானத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத் தின் சார்பாக பெரம்பலூர் மாவட்டக்கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத்தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்டஇணை செயலாளர் சின்னதுரை வரவேற்றார். மாவட்டத் துணைத்தலைவர் சிவகலை, சுப்பிரமணியன், செல்வராசு, சங்கபிள்ளை, சாந்தப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால் சாமி பேசினார்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் செல்ல பிள்ளை வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆளவந் தார் சிறப்புரையாற்றினார். இந்த பெருந்திறள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில் மாவட்ட பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi Pensioners' Association ,Perambalur ,Anganwadi Pensioners Association ,Tamil Nadu Sathunavu ,
× RELATED மதுராந்தகத்தில் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்