×

மதுரை மாநகர காவல்துறையில் புதிய வரவான மோப்ப நாய் அழகர் என பெயரிட்டனர்

மதுரை, ஆக. 6: மதுரை மாநகர காவல் துறையில், துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவில் வெடிகுண்டு, போதைப்பொருட்கள், குற்றங்கள் போன்றவற்றை கண்டறிய 8 நாய்கள் உள்ளன. இந்நிலையில் புதிதாக பிறந்து 100 நாட்கள் ஆன லேபர் டாக் ரெட் ரிவர் இனத்தைச் சேர்ந்த நாய் தற்போது வாங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்படி, இந்த புதிய நாய்க்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சிகள் 6 மாத காலத்திற்கு அளிக்கப்படும். பின்னர் இந்த நாய் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த புதிய நாய்க்கு அழகர் என போலீஸ் கமிஷனர் பெயரிட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வில், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர், ஆய்வாளர் மற்றும் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவின் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post மதுரை மாநகர காவல்துறையில் புதிய வரவான மோப்ப நாய் அழகர் என பெயரிட்டனர் appeared first on Dinakaran.

Tags : Madurai Metropolitan Police ,Alaghar ,Madurai ,Madurai Metropolitan Police Department ,Red River ,Alakar ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே காட்டுப்பன்றியை...