- மருத்துவத் திட்டத்தைத் தேடுதல்
- முதன்மை
- ஆரோக்கியம்
- மையம்
- பரமக்குடி
- எம்எல்ஏ முருகேசன்
- மருத்துவத் திட்டத்தைத் தேடும் மக்கள்
- போகலூர் ஆரம்ப சுகாதார நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
பரமக்குடி,ஆக.6: போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவினை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டாரத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களை தேடி மருத்துவம் மிக சிறப்பான பணியை செய்து வருகிறது. கிராமப்புறங்களுக்கு சென்று உடல் பரிசோதனை முதல் மேல் சிகிச்சை வரை அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்காம் ஆண்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்து சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், துணைப் தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் கதிரவன், குணசேகரன் மற்றும் மருத்துவர் கார்த்திக் உட்பட மருத்துவ செவிலியர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட நான்காம் ஆண்டு துவக்கம் appeared first on Dinakaran.