- விசிக மாவட்ட செயற்குழு
- பெரியகுளம்
- கிழக்கு மாவட்டம்
- பணிக்குழு
- விடுதலை புலிகள் கட்சி
- கிழக்கு மாவட்ட
- அரிமா ஜே.ரபிக்
- பெரியகுளம் ஒன்றியம்
- ஆண்டி
- நகர செயலாளர்
- ஜோதி முருகன்
- சட்டமன்ற தொகுதி
- விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்
- தின மலர்
பெரியகுளம், ஆக. 6: பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அரிமா ஜெ.ரபீக் தலைமை வகித்தார். பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ஜோதி முருகன், சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் ஆண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுசி.தமிழ் பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தேனி, திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மாநில துணைச் செயலாளர் தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கருப்பணன், பாஸ்கரன்,செல்லதம்பி, ராஜதுரை, தளபதி, அன்பு வடிவேல், ஈஸ்வரி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தென்கரை பேரூராட்சி கவுன்சிலர் கைலாசம் நன்றி கூறினார்.
The post பெரியகுளத்தில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.