×

பேரணாம்பட்டு அருகே 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம்: அழகான பெண் குழந்தை பிறந்தது

வேலூர், ஆக.6: பேரணாம்பட்டு அருகே மருத்துவமனை செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இளம்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலைகிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாஸ்கர். இவரது மனைவி கிருஷ்ணவேணி(25). நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று பிரசவ வலியால் தவிப்பதாக அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலை 11.30 மணியளவில் டி.டி.மோட்டூரில் இருந்து ஓட்டுனர் ஜெயக்குமார், மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சென்று பாஸ்மார்பெண்டா கிராமத்தில் பிரசவ வலியால் தவித்த இளம்பெண்ணை அருகில் உள்ள அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே பெண்ணிற்கு பிரசவவலி அதிகரித்தது. இதனால் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் பிரசவ சிகிச்சை மேற்கொண்டார். இதில் மதியம் 12 மணியளவில் அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் பேரணாம்பட்டு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஜெயக்குமார், அவசர மருத்துவ உதவியாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

The post பேரணாம்பட்டு அருகே 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம்: அழகான பெண் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,Vellore ,Bhaskar ,Pasmarbenda ,Vellore district ,Krishnaveni ,
× RELATED சிறுவனை கடத்தி திருமணம் செய்த...