×

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு லேப்டாப், பாராட்டு சான்றிதழ்: கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்

செய்யாறு, ஆக. 6: முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு லேப்டாப், பாராட்டு சான்றிதழை கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2023-2024ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற மாணவி டி.பிரிதர்ஷிணி ஜெஇஇ தேர்வில் வெற்றி பெற்று வாரங்கல், என்ஐஐடி யில் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர ஆணை பெறப்பட்டதை தொடர்ந்து, அம்மாணவியை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டி மடிக்கணினி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனத்தில் சேர உள்ள அம்மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ரவிக்குமார் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை மற்றும் உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்களான விஸ்வநாதன், பேபி ராணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி தேவி மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாணவியர் சங்க தலைவி மெய்.பூங்கோதை மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.

The post முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசு பள்ளி மாணவிக்கு லேப்டாப், பாராட்டு சான்றிதழ்: கல்வித்துறை அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Education Minister ,Seiyaru ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Education ,
× RELATED செய்யாறு அருகே சிறுமி உயிரிழந்ததற்கு...