×

கடம்பாடியில் எம்எல்ஏ ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி கிராமம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் மிக பழமை வாய்ந்த வெள்ளேரி குட்டை ஒன்று உள்ளது. அருகில், உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் குட்டை முழுவதும் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சி தருகிறது. மேலும், குட்டையில் விடப்படும் கழிவுநீரை தடுக்கும் வகையில், வெள்ளேரி குட்டையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், கழிவுநீர் வரும் கால்வாயை அடைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கழிவுநீர் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், திமுக பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், திமுக ஒன்றிய துணை செயலாளர் பூபதி, மதிமுக ஒன்றிய செயலாளர் குமார், விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, விசிக ஒன்றிய பொருளாளர் எழில் ராவணன், விசிக நகர செயலாளர் ஐயப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கடம்பாடியில் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Gadambadi ,Mamallapuram ,Velleri Kuttai ,Muthumariamman Koil Street, ,
× RELATED மாமல்லபுரம் அருகே பரபரப்பு காப்புக்காட்டில் திடீர் தீ விபத்து