×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்தவர் அந்தோனி மகாராஜா (45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தோனி மகாராஜா உள்ளிட்ட மீனவர்கள் 12 பேர் கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி தருவைகுளத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் அந்தோனி தென் டேனிலா(23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த இரு விசைப்படகுகளிலும் சென்ற மீனவர்கள் 22 பேரும் இலங்கை கடல் பகுதி அருகே நேற்று (5ம் தேதி) மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி தருவைகுளத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் 22 மீனவர்களும் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED 35 வயது பெண் பலாத்காரம் 75 வயது முதியவர் கைது