×

விபத்தில் பலியான ஏட்டு உடல் அரசு மரியாதையுடன் தகனம்

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் குமரன்(52), போரூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அண்ணா நகரை சேர்ந்த சத்திய சாய்ராம் என்பவர், ரேஸ் பைக்கில் வேகமாக வந்து மோதியதில் குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இறந்துபோன தலைமை காவலர் குமரனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆவடி துணை கமிஷனர் ஐமான்ஜமால் நேரில் சென்று, தலைமை காவலர் குமரனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தலைமை காவலர் குமரன் உடல், அய்யப்பன்தாங்கலில் உள்ள மின்சார சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post விபத்தில் பலியான ஏட்டு உடல் அரசு மரியாதையுடன் தகனம் appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Kumaran ,Ayyappanthangal ,Borur police station ,Mundinam Thambaram-Madurawal Bypass Road ,Satya Sairam ,Anna Nagar ,
× RELATED மூச்சு திணறி உயிரிழந்த பெண்ணின் உடலை...