×

அதிமுக மாவட்ட செயலாளர் தாக்கியதாக கட்சி நிர்வாகி கண்ணீர் வீடியோ வைரல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் அரசு வக்கீலுமான கிருஷ்ணன் நேற்று விழுப்புரம் தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெறும் நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் இன்று(நேற்று) உளுந்தூர்பேட்டை அதிமுக நகர செயலாளர் துரை, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு அழைப்பதாக தெரிவித்தார். நானும், மனைவியும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வீட்டுக்கு சென்ற போது பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்த போது குமரகுரு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மனைவி கண் முன்னே கழுத்தை பிடித்து தள்ளினார் என கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை எடப்பாடி பழனிசாமி மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் காப்பாற்ற வேண்டும். குடும்பத்துக்கு நீதி வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் எந்த அதிமுக தொண்டருக்கும் இந்த பாதிப்பு ஏற்படக் கூடாது என கண்ணீர் விட்டு அழுதபடி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post அதிமுக மாவட்ட செயலாளர் தாக்கியதாக கட்சி நிர்வாகி கண்ணீர் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : archbishop ,district secretary ,Viluppuram ,Viluppuram District, ,Utundurpetaya District ,M. G. KRISHNAN ,R ,YOUTH TEAM SECRETARY AND FORMER GOVERNMENT ADVOCATE ,CARE UNIT ,VILLUPURAM PRIVATE HOSPITAL ,archbishop district ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...