- தஞ்சாவூர்
- அன்பு நகர், விளார் சாலை
- வார்டு 35
- தஞ்சாவூர் கழகம்
- தேவேந்திரன்
- வாலாவம்பட்டி
- கந்தர்வக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- ஜெயநாராயண மூர்த்தி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 35வது வார்டு விளார் சாலை அன்பு நகரில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. நேற்று மாலை 6.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வளவம்பட்டியை சேர்ந்த தேவேந்திரன்(32), தஞ்சாவூர் ஜெயநாராயண மூர்த்தி(27) ஆகிய இருவரும் குழியில் இறங்கி சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென மண் சரிந்து விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து 3 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தேவேந்திரன் மீட்கப்பட்டார். ஜெயநாராயண மூர்த்தி சடலம் இரவில் மீட்கப்பட்டது.
The post பாதாள சாக்கடை பணியில் மண் சரிந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.