புழல்: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 17 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு ரவுடிகள் ஒழிப்பு, வழிப்பறி, கொள்ளையர்கள் கைது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 29ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான 7 நாட்களில் சென்னை பெருநகர் காவல் எல்லையில் கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 17 பேரை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குறிப்பாக, சைதாப்பேட்டை திடீர் நகர் பகுதியில் கடந்த 25ம் தேதி ஆகாஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய தமிழ்செல்வன் (எ) தாமஸ்(23), சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரை சேர்ந்த அஜய்(24), பிரதீப்(24), பூக்கடை பகுதியில் பாபு என்பவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட பல்லவன் சாலையை சேர்ந்த கவுதம்(24), திருவான்மியூர் பகுதியில் கவுதம் என்பவரை கொலை செய்த வழக்கில் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த கமலேஷ்(27),
பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன்(31), சைதாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கண்ணகி நகரை சேர்ந்த ஜான்பாஷா (31), ஜெ.ஜெ.நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சோழவரம் பெரிய காலனியை சேர்ந்த கார்த்திக்(26), பேசின் பாலம் பகுதியில் மாவா மற்றும் குட்கா விற்பனை செய்து வந்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுதா(34), கிண்டி பகுதியில் திருமூர்த்தி என்பவரை கொலை முயற்சியில் ஈடுபட்ட மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஐயப்பன்(27), வடபழனி பகுதியில் ராகவேந்திரா என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்தீப்குமார்(29),
நடிகைகளை துபாய்க்கு அழைத்த சென்று பாலியல் தொழில் செய்த வழக்கில் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகமது (எ) ஷகீல்(56), நுங்கம்பாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தை சேர்ந்த அருள் பிரான்சிஸ்(23), நந்தம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த சதீஷ்(31), கிண்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சைதாப்பேட்டை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த பரத்(22), திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (எ) கொடுங்கையூர் சிவா(26) ஆகிய 17 பேரை கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post கடந்த ஒரு வாரத்தில் குற்றங்களில் ஈடுபட்ட 17 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.