×

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக.7-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆடிப்பூர திருவிழா இன்று துவங்கி 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் 5ம் நாள் திருவிழாவான ஆகஸ்ட் 3ம் தேதியன்று கருட சேவையும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5ம் தேதி சயன சேவையும் நடைபெறும். இத்திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த தேரோட்டத்தின்போது பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆடிப்பூர தேர்த்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு ஆக.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆக.17, பணி நாளாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்..

The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக.7-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adipurat ,Temple ,Srivilliputur ,Andal Temple ,Virudhunagar ,District Governor ,Jayaseelan ,Adipurat of Srivilliputur Andal Temple ,Adipura Chosen Festival ,Dinakaran ,Adipurat Temple ,Srivilliputur Andal ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!