×

தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்

தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. சென்னையில் தற்போது எங்கும் மழைநீர் தேங்கவில்லை என்றும் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா? என்ற கேள்வி முதலமைச்சரிடம் வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Venus Nagar ,Kolathur block, Chennai ,
× RELATED அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச்...