கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு: அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

கோவை: கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட திமுக தரப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டின் மாமன்ற உறுப்பினராக உள்ள ரங்கநாயகி திமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரக்கூடிய கவுன்சிலர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு மற்றும் முத்துசாமி பங்கேற்றுள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட திமுக கவுன்சிலர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இக்கூட்டத்தில் தலைமை கழகத்தின் முடிவின் அடிப்படையில் வேட்பாளராக ரங்கநாயகி நிறுத்தப்பட்டுள்ளார். கோவையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் தற்போது மேயராக தேர்தெடுக்க கூடியவர் எத்தகைய பணிகளை மேற்கொள்ளப்போகிறார் என்பது குறித்தான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது மேயராக அறிவிக்கப்பட்டிருக்கிறவர் நாளை நடைபெற உள்ள தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்.

The post கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு: அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: