- வயநாடு
- கேரளா
- முதல் அமைச்சர்
- பினராயி விஜயன்
- திருவனந்தபுரம்
- சூரல்மலை
- முண்டாக்கை
- வயநாடு மாவட்டம்
- தின மலர்
திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவு, கேரளா போலீஸ், தீயணைப்புத் துறை, வனத்துறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத் துறை, மருத்துவக் குழு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை என்று 12 குழுக்களைச் சேர்ந்த 1264 பேர் 6 பிரிவுகளாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மோப்ப நாய்களும் மண்ணில் புதைந்தவர்களை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது. மீட்புப் படையில் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மோப்ப நாய்களான மாயா, மர்பி, ஏஞ்சல் ஆகியோரால் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்திய ராணுவத்தில் காடாவர் நாய்களான ஜாக்கி, டிக்ஸி, சாரா ஆகியனவும் சிறப்பாக பணியாற்றுகின்றன. கர்நாடக, தமிழக காவல்படைகளின் நாய்களும் பேரழிவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சேற்றில் புதைந்த உடல்களை பாதகமான சூழலிலும் இவற்றால் நுகர முடிவது பாராட்டுக்குரியது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது : கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு appeared first on Dinakaran.