இதனிடையே 64 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்த உடல்களை உரிமை கோர யாரும் முன்வராததால் அவற்றை சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அருகிலுள்ள புத்துமலை பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று இந்த இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு 8 உடல்கள் சர்வ மத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே பாதிக்கப்பட்டு மக்களுக்கு உதவ தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கப்போவதாக காங்கிரஸ் தலைமையிலான கேரள எதிர்க்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.புனரமைப்பு உள்ளிட்ட பணிகளில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் அந்த கூட்டணி அறிவித்துள்ளது. அதே நேரம் 2016 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பேரிடர் திட்டத்திற்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தேசிய பேரிடர் முன்னெச்சரிக்கை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
The post வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 385ஐ தாண்டியது : தங்கள் 1 மாத ஊதியத்தை வழங்கும் கேரள கூட்டணி எதிர்க்கட்சிகள் appeared first on Dinakaran.