கோவை ஆக 5: கோவை நகர், புறநகரில் மதம், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆதாரமற்ற பதிவு, தனி மனித ரீதியான கருத்துக்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக்கில் ஆட்சேபகரமான தகவல்களை பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வெளியிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. சில அமைப்புகளின் கருத்துகள், சித்தரிப்பு தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேப கருத்துக்களையும், செயல்பாடுகளையும் முற்றிலும் தடுக்க முடியாத நிலையிருக்கிறது. விமர்சனம், வதந்திகளை கட்டுப்படுத்த பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆட்சேப கருத்துகள், சித்தரிப்புகளை கண்டறிய சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் சில அமைப்புகளை சைபர் கிரைம் போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து கண்காணிக்கின்றனர்.
ஆட்சேப கருத்துக்களை வௌியிடும் நபர்களின் கருத்து பதிவுகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். வெளியிடப்படும் கருத்துக்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் நிலையிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் பேஸ்புக்கில் ஆட்சேப கருத்துக்களையும், அமைதியை குலைக்கும் வகையிலான கருத்துக்களையும் வெளியிட்ட சிலர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பு, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு தரும் அமைப்புகளின் விமர்சன பதிவுகளையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
The post சமூக வலைதள பதிவுகள் கண்காணிப்பு appeared first on Dinakaran.