செங்கல்பட்டு, ஆக.5: சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. தமிழகம் முழுவதும் மக்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்த மனுக்களை நேரடியாக பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீராபுரம் சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் சிங்கபெருமாள் கோவிலில் நடந்தது.
இதில், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமை தாங்கி மக்களுடன் முதல்வர் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அரசுத்துறை அதிகாரிகள் மூலமாக உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதில், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, காதுகேட்கும் கருவி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புதியபட்டா, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர் நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.