- நியூ மெக்சிகோவின் ஆளுநர்
- கோவில்
- மாமல்லபுரத்தில்
- கவர்னர்
- நியூ மெக்சிகோ
- மைக்கேல் லுஜன் க்ரிஷாம்
- மெக்ஸிக்கோ
மாமல்லபுரம், ஆக. 5: மாமல்லபுரம் கடற்கரை கோயிலை நியூ மெக்சிகோ கவர்னர் கண்டு ரசித்தார். மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க நியூ மெக்சிகோவின் பெண் கவர்னர் மைக்கேல் லுஜன் க்ரிஷாம் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயில் வந்தடைந்தார். கடற்கரை கோயிலில் ஒவ்வொரு சிற்பமாக சுற்றிப் பார்த்து ரசித்தார்.
பின்னர், கடற்கரை கோயில் முன்பு நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது, செல்போனிலும் கடற்கரை கோயிலையும், சுற்றிப் பார்க்க வந்த சக பயணிகளையும் படம் பிடித்தார். அவருக்கு, மாமல்லபுரத்தின் சிறப்பு, கடற்கரை கோயில் செதுக்கப்பட்ட காலம், செதுக்கிய மன்னர்களின் பெயர்கள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை சுற்றுலா வழிகாட்டி ஜானகிராமன் தெளிவாக விளக்கிக் கூறினார். முன்னதாக, நியூ மெக்சிகோ கவர்னர் வருகையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கடற்கரை கோயிலை நியூ மெக்சிகோ கவர்னர் கண்டு ரசித்தார் appeared first on Dinakaran.