- போலீஸ் எஸ்.பி.
- காஞ்சிபுரம்
- மாவட்ட காவல்துறை சமாஜ்வாதி
- சண்முகம்
- காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி
- தமிழ்நாடு அரசு
காஞ்சிபுரம், ஆக.4: காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் – காவல்துறை இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் பரிசு வழங்கி பாராட்டினார். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி (பொறுப்பு ஆயுதப்படை) சுரேஷ் மற்றும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ஸ்டான்லி மேற்பார்வையில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகள் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கபடி, ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையே நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி சண்முகம் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது, தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று எஸ்பி தெரிவித்தார்.
The post பொதுமக்கள் – காவல்துறை இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு: போலீஸ் எஸ்பி வழங்கினார் appeared first on Dinakaran.