சேலம், ஆக.4: சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில், தேவராஜ் என்ற பெயரில் பழக்கடை உள்ளது. ஆடி 18 ஆனதால் கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் சென்றுவிட்டார். நேற்று மாலை, கடையில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள், கதவை திறந்து தீயை அணைத்தனர். மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பழங்களும் சேதம் அடைந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பழக்கடையில் தீடீர் தீ விபத்து appeared first on Dinakaran.