×

தேர்வு முடிவுகள், உடனடி தேர்வு குறித்த அறிவிப்பு: வெளியீடு

சென்னை: தேர்வு முடிவுகள் மற்றும் உடனடித் தேர்வு எழுதுவது குறித்த அறிவிப்பை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்பு 1வது செமஸ்டர் முதல் 5வது செமஸ்டர் வரையிலும், முதுகலை படிப்பு மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. https://egovernance.unom.ac.in/results/, https://Exam.unom.ac.in என்ற இணையதளங்களில் தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் 2021-22ம் ஆண்டில் இளங்கலை படிப்புகளிலும், 2022-23ம் ஆண்டில் முதுகலை மற்றும் தொழில்சார் படிப்புகளிலும் சேர்ந்தவர்கள் வருகிற 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை www.unom.ac.in என்ற இணையதளம் வாயிலாகரூ.1,000 கட்டணத்துடன் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதவிர, செமஸ்டர் தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உடனடி தேர்வில் பங்கேற்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

The post தேர்வு முடிவுகள், உடனடி தேர்வு குறித்த அறிவிப்பு: வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,University of Chennai ,Chennai University ,Dinakaran ,
× RELATED சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும்