×

சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், ஆக.4: சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அளவிலான சுற்றுலாத்துறை தொடர்பான தொழில் புரிவோருக்கு 2024ம் ஆண்டிற்கான விருதுகள் உலக சுற்றுலாத் தினத்தில் வழங்கப்பட உள்ளன. அதன்படி சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 17 வகைகளின்கீழ் 48 விருதுகள் வழங்கப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்க ஆக.20 கடைசிநாள். தேர்வு செய்யப்பட்ட வகைகளுக்கான விருதுகள் செப்.27ல் சென்னையில் நடைபெறும் உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சுற்றுலா அலுவலரை 7397715688 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,World Tourism Day ,Dinakaran ,
× RELATED கல்விக்கடன் சிறப்பு முகாம் 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பு