×

பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி தேனியில் உள்ள புதிய மற்றும் பழைய பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பிதால் பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ஆடி மாதம் 18ம் நாளை ஆடிப்பெருக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் குலசாமி கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்படி, குலசாமி கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கான நேற்று தேனி மாவட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேனி அருகே வீரபாண்டி, குச்சனூர், வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் குலசாமி வழிபாடுகளுக்கு செல்ல தேனி நகர் பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பியது. பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பேருந்துகளில் இடம் பிடிக்க குழந்தைகளுடனும், வயதான முதியவர்களுடன் வந்த பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

The post பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Adiperu Day ,Theni ,Adi month ,Adiperu ,Kulaswamy ,
× RELATED அடிப்படை வசதிகள் கோரி கலெக்டரிடம் மனு