×

சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி மைசூரு நோக்கி பாஜ-மஜத பாதயாத்திரை: பெங்களூருவில் தொடங்கியது

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) மாற்று நிலம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜ குற்றம்சாட்டிவருகிறது. மூடா முறைகேட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துவரும் பாஜ, முதல்வர் பதவி விலக வலியுறுத்தி பெங்களூருவிலிருந்து மைசூருவிற்கு நேற்று பாதயாத்திரையை தொடங்கியது.

பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் பாஜ – மஜதவினர் பாதயாத்திரையை தொடங்கினர். பாஜ தலைவர்களுடன், மஜத இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமியும் கலந்துகொண்டார். பெங்களூருவில் நேற்று தொடங்கிய இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் 10ம் தேதி மைசூருவில் மாநாட்டுடன் முடிவடைகிறது. பாதயாத்திரை தொடங்கும்போது பேசிய முன்னாள் முதல்வரும் பாஜ மூத்த தலைவருமான எடியூரப்பா, ‘சித்தராமையா அவராகவே முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது நல்லது’ என்றார்.

The post சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி மைசூரு நோக்கி பாஜ-மஜத பாதயாத்திரை: பெங்களூருவில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : BJP ,MJD Padayatra ,Mysuru ,Siddaramaiah ,Bengaluru ,Mysuru Municipal Development Corporation ,MUDA ,Karnataka ,Chief Minister ,Parvati ,
× RELATED உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக:...