×

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

சேலம், ஆக.3: சேலம் ஓமலூர் மூங்கில்பாடி பகுதியை சேர்ந்தவர் காந்த். இவரது மனைவி சுருதி (22). இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுருதி குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு திருச்செங்கோட்டில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக குழந்தையுடன் புறப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லாதது தெரிந்தது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் கருப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post குழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Moongilbadi ,Salem Omalur ,Sruthi ,
× RELATED சேலம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைவால் பூண்டு விலை ரூ.450 உயர்வு..!!