நன்றி குங்குமம் தோழி
யோகாசனப் பயிற்சிகள் செய்வதால் பல நன்மைகள் உண்டு. உடலை நல்ல நிலையில் வைத்திருப்பது மட்டுமின்றி நோய்கள் சேராமல் தடுக்கின்றன. இதனால் உடல் உள்ளுறுப்புகள் பலமடைகின்றன. வீண் சதைப் பிடிப்புகள் ஏற்படாது. சுறுசுறுப்பு, புத்தித் தெளிவு, நினைவாற்றல் அதிகப்படும்.பிராணாயாமம்: நுரையீரல் ஆரோக்கியமாகும். ரத்தம் எல்லா உடல் திசுக்களுக்கும் சென்றடையும். எனவே உடல் நன்முறையில் இயங்கும்.பதுமாசனம்: பதுமம் என்றால் தாமரை. தாமரை வடிவில் அமர்தல். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மூளையை நன்றாக செயல்பட உதவும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். செரிமான பிரச்னையை போக்கும்.
மயூராசனம்: வயிற்றுப் பிணிகள் நீங்கும். முக்குற்றங்களும் தன்னிலைப்படும். செரிமான உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாயும்.
புஜங்காசனம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். முதுகுத் தண்டுக்கு பயிற்சி கிடைக்கும்.
தனுராசனம்: பசியைத் தூண்டும். கல் பிணிகளுக்கு சிறந்தது.
சலபாசனம்: மலச்சிக்கலை போக்கும். வயிற்றின் உள் உறுப்புகளுக்கு பயிற்சி தரும். இதய நோய், நுரையீரல் நோய் உடையோர் இதை செய்யக் கூடாது.
சவாசனம்: களைப்பைப் போக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
சிரசாசனம்: மூளைக்கு அதிகம் ரத்தம் பாய்ந்து மூளை பலப்படும். நரம்பு மண்டலத்தைத் தூண்டும். மாதவிடாய், கர்ப்ப காலங்களில் செய்யக் கூடாது.
சர்வாங்காசனம்: நரை, திரை, மூப்பை மாற்றி இளமையை உண்டாக்கும். உடலின் எல்லா உறுப்புகளும் பலப்படும். கருப்பை கோளாறு நீங்கும். தலைவலி, நாடி பலமின்மை,
மலச்சிக்கல் தீரும்.
– எஸ்.ராமதாஸ், புதுச்சேரி.
The post நோய் தீர்க்கும் ஆசனங்கள் appeared first on Dinakaran.