×

வேலைக்குப் போகும் கர்ப்பிணியா?

நன்றி குங்குமம் தோழி

*வேலைக்குப் போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டு விடக் கூடாது. கருவுக்கு அவ்வப்போது தேவையான போஷாக்கான ஆகாரம் கொடுக்க வேண்டும்.

*டைல்ஸ் தரையில் கவனத்துடன் மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடந்து வழுக்கி விழுந்தால் சிக்கல்தான்.

*அலுவலகத்தில் தரைத்தளம் என்றால் சிக்கல் இல்லை. அதுவே மாடிப்படி என்றால் கூடுதல் கவனம் தேவை.

*மாடிப்படி ஏற கஷ்டமாக இருந்தால் லிப்ட் பயன்படுத்தலாம்.

*வேலை நேரத்தில் இடையிடையே சத்தான பழங்கள், காய்கறி சாலட்களை சாப்பிடலாம். ஜூஸ் பருகலாம். இது பணியின் சோர்வை போக்குவதோடு, குழந்தைக்கும் கர்ப்பிணிக்குமான சரிவிகித சத்துக்களை நிலை நிறுத்தும்.

*காபியில் உள்ள காஃபின் குழந்தைக்கு ஆகாது. எனவே, காபியை தவிர்த்து ஆரோக்கிய பானங்களை பருகலாம்.

*கர்ப்பம் உறுதியானவுடன் பயப்படாமல், தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

*காலையில் ஏற்படும் சோர்வு, அழற்சியை கண்டு துவண்டுவிடக்கூடாது.

* கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும். சங்கடப்பட்டு அடக்கி வைத்தால், கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும்.

*ஒரே வேளைக்கான உணவை மட்டும் எடுத்து செல்லாமல் பிஸ்கெட், பழங்கள், கஞ்சி போன்றவற்றை எடுத்துச் சென்றால், திடீர் பசிக்கு கை கொடுப்பதுடன் சோர்வு ஏற்படாமலும் இருக்கும்.

*வயிற்றை அழுத்தாத உடைகளை அணியவும். முடிந்தவரை பருத்தி ஆடைகளையே அணியவும்.

* கையில் எப்போதும் ஒரு பாட்டிலில் தண்ணீரை வைத்துக் கொள்ளவும்.

*அதிக நேரம் கால்களைத் தொங்கவிடாமல் ஒரு மணிக்கு ஒரு முறை கால்களை நீட்டி பத்து நிமிடங்கள் வைக்கவும்.

*அதிக நேரம் உட்காராமல் ஐந்து நிமிடங்கள் நடந்து விட்டு மீண்டும் வேலைகளில் ஈடுபடலாம்.

*ஹீல்ஸ் போன்ற காலணிகளை முற்றிலும் தவிர்த்து விட்டு ஷூ, ஃப்ளாட் செருப்புகளை அணியவும்.

*இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

*கண் விழித்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் பெண்கள், அதற்கேற்றவாறு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

*வேலையில் இருந்து எப்போது விடுப்பு எடுத்துக் கொள்வது, எப்போது மீண்டும் சேர்வது என்பது போன்ற விஷயங்களை முன்கூட்டியே ஆலோசித்துக் கொள்ளவும்.

– டி.லதா, நீலகிரி.

The post வேலைக்குப் போகும் கர்ப்பிணியா? appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனி கல் தொடாது கை!