×

நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர்!

நன்றி குங்குமம் தோழி

இளநீரில் வைட்டமின்கள், மினரல்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், நம்முடைய உடலின் எலக்ட்ரோலைட்டுகள் சீராகின்றன. இவை தவிர இளநீர் குடிப்பதால் பலவித நன்மைகள் ஏற்படும்.

*இளநீரில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன. இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்க உதவுகிறது.

*இதில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், சோடியம் மற்றும் மாங்கனீசு உள்ளன. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

*இளநீர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

*இதில் அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கி செரிமான திறனை அதிகரிக்க உதவுகின்றன.

*குறைந்த அளவு கலோரி மற்றும் பயோ ஆக்டிவ் என்சைம்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.

*பொட்டாசியத்தின் குறைவால் இதயபிரச்னை, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.

*இளநீர் அருந்துவதால் சிறுநீரகக் கல் பிரச்னை வராமலும் தடுக்கலாம்.

*ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம்.

*இளநீரில் பச்சை இளநீர், செவ்விளநீர், கருவிளநீர், மஞ்சள் கச்சி இளநீர், கேனி இளநீர், குண்டற்கச்சி இளநீர், ஆயிரங்கச்சி இளநீர் என பல வகைகள் உள்ளன.

*கோடை காலத்தில் மட்டுமின்றி மற்ற காலங்களிலும் இளநீரை தொடர்ந்து பருகி வந்தால் உடல் குளிர்ச்சியான தன்மையை அடையும். இதனால் கண் எரிச்சல் தீரும். வாதம், பித்தம் போன்ற நோய்கள் இருந்தால் குணமாகும்.

*காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் இளநீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் அது பசியை அறவே ஒழித்து விடும்.

*இளநீர் உடலை ஆரோக்கியமாகவும், மினுமினுப்பாகவும் வைத்திருக்க உதவும்.

*கோடையில் பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படும். அந்த சமயங்களில் இளநீரை அதிகம் உட்கொண்டால் நீர்க்கடுப்பு, நீர் சுருக்கு போன்றவை அகலும்.

*மாலையில் இளநீர் குடித்தால் வயிற்றுப் போக்கு வராது. மேலும் வயிற்றில் பூச்சிகள் எதுவும் இருந்தால் நீங்கி விடும்.

*தாகம் தீர வேண்டுமானால் கேனி இளநீரை குடிக்க வேண்டும். இந்த இளநீருக்கு சூட்டை தணித்து மந்த தன்மையை விரட்டும் ஆற்றல் உண்டு.

– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

The post நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சல்மான் கான்-ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!