×

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலை மறியல்

பெரம்பலூர், ஆக.2: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூ- கட்சிகள் சார்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 15 பெண்கள் உட்பட 96 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு சலுகை மழை பொழியப்பட்டுள்ளது எனக் கூறி, பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, பெரம்பலூரில் இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வற்றின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நேற்று (1ஆம்தேதி) நடைபெற்றது. பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி, ரோவர் வளைவு அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு, மார்க். கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். மார்க். கம்யூ. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சிந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த மறியல் போராட்டத் தில் மார்க். கம்யூ. கட்சியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்ல துரை, கலையரசி, அகஸ் டின், ரெங்கநாதன், ஏ.கே. ராஜேந்திரன், டாக்டர் கருணாகரன் மற்றும் இந்திய.கம்யூ. கட்சியை சேர்ந்த மாநில கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வேணு கோபால், மாவட்ட பொரு ளாளர் ராமராசு, மாதர் சங்க மாவட்டசெயலாளர் அமுதா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தனராஜ், அரும்பாவூர் நகர செயலாளர் ஆறுமுகம், பெரம்பலூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மாவட்ட குழு உறுப்பினர் கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட 15பெண்கள் உள்பட 96 பேர் பெரம்பலூர் போலீசா ரால்கைதுசெய்யப்பட்டனர்.

The post பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Marxist Communist Party of India ,Perambalur ,Communist Party of India ,Marxist Communist Party ,Tamil ,Nadu ,Union government ,India ,Marxist Commune ,Dinakaran ,
× RELATED புது ஆத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத்...