- கிருஷ்ணராயபுரம் நகராட்சி
- கிருஷ்ணராயபுரம்
- கிருஷ்ணராயபுரம் நகராட்சி
- சேதுமணி
- துணை ஜனாதிபதி
- வரமதி
- நிர்வாகி
- யுவராணி
- சவரிமுத்து
- தின மலர்
கிருஷ்ணராயபுரம், ஆக.2: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் சேதுமணி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் யுவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தீர்மானங்களை வரி தண்டலர் சவரிமுத்து வாசித்தார். இதில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வார்டு எண் 2 அரசவல்லி தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பிடம் கட்டுதல், வார்டு எண் 10 கிழக்கு அரிஜன காலணியில் ரூ.9.96 லட்சம் மதிப்பில் சிறுநீர் கழிப்பிடத்துடன் கூடிய சமுதாய கழிப்பிடம் கட்டுதல், பேரூராட்சி அலுவலகத்திற்கான அலுவலகம் வார்டு எண் 7 முதலியார் தெருவில் கட்டுவதற்கான கருத்துரு தயார் செய்தல்,
பேரூராட்சியின் நிர்வாக செலவினம் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சசிகுமார், ராதிகா, இளங்கோ, லோகநாதன், வடிவேல், சுசிப்பிரியா, மதியழகன், நல்லேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.