×

புதிய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த மழைநீரால் அதிர்ச்சி: பக்கெட் வைத்து பிடிக்கும் ஊழியர்கள்

புதுடெல்லி: டெல்லியில் சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 1 மணி நேரத்துக்கும் மேல் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 1 மணி நேரத்தில் சுமார் 112.5 மிமீ மழை கொட்டியது. பொதுவாக மேக வெடிப்பு ஏற்பட்டால்தான் இப்படி மழைக்கு வாய்ப்பு அதிகம். இதனிடையே இந்த கனமழையால் நாடாளுமன்ற வளாகமும் மழைநீரால் சூழப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகளும் நாடாளுமன்ற வளாகத்தின் உள்பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. அத்துடன் நாடாளுமன்ற லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து நீர் கசிந்து கொண்டே இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை பக்கெட் வைத்து பிடித்து ஊழியர்கள் வெளியே கொட்டி வந்தனர். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தின் மைய பகுதியில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். ேமலும் அனைத்து கட்சி எம்பிக்களும் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்

 

The post புதிய நாடாளுமன்றத்துக்குள் புகுந்த மழைநீரால் அதிர்ச்சி: பக்கெட் வைத்து பிடிக்கும் ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Delhi ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...