×

ரோஹித், தோனி இருவருமே சமமானவர்கள் என்றே நான் கூறுவேன்: ரவி சாஸ்திரி

டெல்லி: ரோஹித், தோனி இருவரில் யார் சிறந்தவர் என கேட்டால், இருவருமே சமமானவர்கள் என்றே நான் கூறுவேன். தோனிக்கு நிகராக இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் என்ற நற்பெயருடன் ரோஹித் வரலாற்றில் இடம்பெறுவார்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து ரோஹித் ஷர்மாவின் தலைமைத் திறன் பரவலாக அனைவரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ரோஹித் ஷர்மாவின் தலைமையின் கீழ், 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி, 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க மைல்கற்களை இந்திய அணி எட்டியுள்ளது.

ஐபிஎல் தொடரில் தோனிக்கு நிகரான கோப்பைகளை மும்பை அணிக்கு ரோஹித் பெற்றுத்தந்துள்ளதால் இருவரும் சமமான கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். இந்நிலையில் “ரோஹித், தோனி இருவரில் யார் சிறந்தவர் என கேட்டால், இருவருமே சமமானவர்கள் என்றே நான் கூறுவேன்” என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “எம்.எஸ்.தோனிக்கு நிகராக இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் என்ற நற்பெயருடன் வரலாற்றில் இடம்பெறுவார் ரோஹித் ஷர்மா.யார் சிறந்தவர் என கேட்டால், இருவருமே சமமானவர்கள் என்றே நான் கூறுவேன். இதைவிட பெரிய பாராட்டு ரோஹித்க்கு என்னால் கொடுக்க முடியாது. ஏனென்றால் தோனி என்னவெல்லாம் சாதித்துள்ளார், எத்தனை கோப்பைகள் வென்றுள்ளார் என நமக்கு தெரியும்.

டி20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியின் போது இந்தியாவின் சுவாரசியமான போட்டியில் ஷர்மாவின் தலைமை முக்கியப் பங்காற்றியது, அழுத்தத்தைக் கையாள்வதற்கும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் அவரது திறனை வெளிப்படுத்தியது. அவரது பேட்டிங் திறமையும் வளர்ந்துள்ளது, அவரது தனிப்பட்ட மற்றும் அணியின் சாதனைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது” என தெரிவித்துள்ளார்.

The post ரோஹித், தோனி இருவருமே சமமானவர்கள் என்றே நான் கூறுவேன்: ரவி சாஸ்திரி appeared first on Dinakaran.

Tags : Rohit ,Dhoni ,Ravi Shastri ,Delhi ,Dinakaran ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை: ரோகித்,...