- கரூர்
- ஐக்கிய விவசாயிகள் முன்னணி
- ராஜசேகர்
- கரூர் அஞ்சல் அலுவலகம்
- சக்திவேல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
கரூர், ஆக. 1: ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் சக்திவேல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி சுப்பிரமணியன், சுவாதி பெண்கள் இயக்க நிர்வாகி மஞ்சுளா உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டமாக அறிவிக்கப்பட்டு, அனைவரும் ஒன்று கூடி அதற்கான பணியை மேற்கொண்ட போது, போலீசார் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொடர்ந்து, இந்த அமைப்பினர் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கிளம்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒன்றிய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.