×

ஆண் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்ற பெண் சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் வலை வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து

வேலூர், ஆக.1: வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்ற பெண்ணை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னி(20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 27ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர், அவரை பிரசவத்திற்காக முதலில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 28ம்தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாய் மற்றும் குழந்தை மருத்துவமனை சீமான்ஸ் வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ேநற்று அதிகாலை சின்னி எழுந்து பார்த்தபோது, தனது அருகே படுக்க வைத்திருந்த குழந்தையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் வந்து விசாரித்தபோது குழந்தையை மர்ம ஆசாமிகள் யாரோ கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து எஸ்பி மணிவண்ணன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பிரசவ வார்டில் புகுந்த பெண், கட்டைப்புடி பையுடன் வெளியே செல்வது பதிவாகியிருந்தது. அவருடன் ஒரு சிறுவனும் நடந்து சென்று கொண்டிருந்தான். அந்த பெண் பையில் குழந்தையை வைத்து கடத்தி சென்றிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பேரில், அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் மருத்துவமனை வளாகங்களில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆண் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்ற பெண் சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் வலை வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து appeared first on Dinakaran.

Tags : Vellore government hospital ,Vellore ,Aravatla village ,Peranampatu ,Vellore district ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்